Sunday, August 13, 2023

பதஞ்ஜலி தியான பீடம் (புதிய முகவரியில் நாம் )

   கொரோனா பொருந்தொற்று காலத்திற்கு பிறகு அதாவது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பிறகு ஸ்வார்த்தம் சத்சங்கம் – பதஞ்ஜலி யோக கேந்திரம் புதிய முகவரியில் இயங்க வேண்டிய சூழல் அவசியமானது.

 

 
பதஞ்ஜலி தியான பீடம்

   இந்த சூழ்நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் நமது யோகப் பயிற்சி பணி அவ்வப் போது மூத்த நிர்வாகிகளால் நடைபெற்றது. இருப்பினும் மக்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் , சத்சங்க உறுப்பினர்களும் தங்களுடைய ஆன்ம நிலையை மேம்படுத்த தியானம் செய்வதற்கும் அவர்களுடைய மையமான பழங்காநத்தம் பகுதியில் ஓரிடத்தில் யோக கேந்திரத்தை பதஞ்ஜலி தியான பீடம் என்ற பெயரில்  மீண்டும் அமைப்பதென முடிவு செய்யப் பட்டது.

 

                                 சத்குருவின் சந்நிதியில் குருவின் திருவடியில்



 சத்சங்க குடும்பத்தினருடன்


 

அண்ணன் சிவஞானம் அவர்களின் தலைமையில்

 

சத்சங்க சகோதரர்களுடன்


  அதன் வழியில் நீண்ட தேடுதலுக்கும் முயற்சிக்கும் பிறகு மதுரை மாடக்குளம் செல்லும் வழியில் அமைந்துள்ள SSB நகரில் அமையப் பெற்றது.

 

 அதன் துவக்க விழா ஆகஸ்ட் 3 வியாழன் (ஆடிப் பெருக்கு ) அன்று காலை நடைபெற்றது. சத்சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மெய்யன்பர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். அன்றைய துவக்க நிகழ்வு அன்புச் சகோதரர் சிவஞானம் தலைமையிலும் , சத்சங்கத்தின் சட்ட ஆலோசகரும் மூத்த நிர்வாகியுமான திரு. சுகுமார் ஐயா அவர்கள் முன்னிலையிலும் துவங்க

 

   சத்சங்கத்தின் தலைவர் மு.கமலக்கண்ணன் மற்றும் செயலாளர் சிவ.உதயகுமார் இருவரும் ஏழு சுமங்கலிகளை அமர வைத்து சப்த மாதர்களாக அவர்களை பாவித்து அவர்களுக்கு பாத பூஜை செய்து அவர்களிடம் ஆசி பெற்றனர்.

 

   பிறகு குருவின் திருவுருவப் படம் திறந்து வைக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து சத்குரு ஸ்ரீ பதஞ்ஜலி மஹரிஷிக்கு பூஜை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப் பட்டது .

 

   இதற்கு முன்னதாக நமக்கெல்லாம் தலைமைப் பீடமாக இருக்கும் சிதம்பரம் நடராஜ பெருமானிடம் பாதத்திலும், அன்னை சிவகாமியின் திருவடியிலும் , காசி விஸ்வநாதர் விசாலாட்சி பதஞ்ஜலி மஹரிஷி மற்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி மற்றும் மாடக்குளம் ஈடாடி அய்யனார் திருப் பாதத்திலும் அவர்களுடைய அருள்வேண்டி  நமது தியான பீடத்தின் அழைப்பிதழ் சமர்ப்பிக்கப் பட்டது.

 

  என்றும் நம்மை வழிநடத்தும் தெய்வமான சத்குரு ஸ்ரீ ஆதிசேஷ பதஞ்ஜலி மஹரிஷியின் நல்லாசியுடன் நமது இதய குருநாதர் யோக ஆச்சாரியார் குருஜி T.S.கிருஷ்ணன் சூட்சும ஆசியுடன் சத்சங்கம் தொடர்ந்து செயல்படும்.

 

   விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய திரு. சுகுமார் ஐயா  அவர்களுக்கும், வாழ்த்துரை வழங்கிய சிவனடியார் சுசிலா அம்மா அவர்களுக்கும், ஏற்புரை வழங்கிய நிறைவுரை ஆற்றிய குருவின் புதல்வர் அன்புச் சகோதரர் T.K.சுப்பிரமணியன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

    கீழ்க் கண்ட முகவரியில் பதஞ்ஜலி தியான பீடம் என்ற பெயரில் சத்சங்கத்தின் மதுரை நகர அலுவலகமாகவும் செயல்படும்.

                தினசரி காலை 6.30 மணி முதல் 8.00மணி வரையிலும் ,               மாலை 6.00மணி முதல் 7.00 மணி வரையிலும் தியான மற்றும் பிராணாயாம பயிற்சி வகுப்புகள் நடைபெறும் ...

 

அன்புடன் 

ஸ்வார்த்தம் சத்சங்கம்

 

 

 

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment