Monday, September 11, 2023

சுவாமி விவேகானந்தர் செப்டம்பர் 11 - சிகாகோ உரை - நினைவலைகள்

   அன்றைய நாளில் அவரை கடைசியாகத்தான் பேச வைத்தார்கள்...

பிறகு ......

கூடிய கூட்டம் எல்லாம் அவருடைய பேச்சை அல்லவா கேட்க காத்திருந்தது...

அவர் முதலில் பேசிவிட்டால் பிறகு மக்கள் கலைந்து போய்விடுவார்கள்.மற்றவர்கள் பேசுவதை கேட்பதற்கு அங்கு ஆள் இருக்காது என்பதால்....

 

 

யார் அந்தப் பேச்சாளர் சொற்பொழிவாளர்!!!!

வேறு யாருமல்ல சுவாமி விவேகானந்தர் தான்!!!

 

   அவரை பேச்சாளர் என்பதோ சொற்பொழிவாளர் என்பதோஆன்மீகவாதி என்பதோ தேசபக்தர் என்பதோ அல்லது மகாகுரு என்பதோ அல்லது சுவாமிஜி என்பதோ மேற்கூறிய பட்டங்கள் எதனுள்ளும் அடங்காதவர் அதனையும் தாண்டிய சிறப்பு பெற்றவர்...

     சுவாமிஜி விவேகானந்தர் அவர்களை உலகம் கண்டு கொண்ட அற்புத தினம் தான் இன்று செப்டம்பர் 11....

    ஆம், இதே நாளில் 1893 ஆம் ஆண்டு சர்வமத மகாசபை கூட்டத்தின் நடுவே 31ஆவது ஆளாக பேசுவதற்காக அவர் காத்திருந்தார்...

          கூட்டத்தில் பேசிய ஒவ்வொரு மத சொற்பொழிவாளர்கள் கனவான்களே சீமாட்டிகளே கனம்பொருந்திய மகாபிரபுகளே என்று உயர்ந்த வார்த்தைகளை உபயோகித்து பேசிக்கொண்டிருந்தார்கள்...

              எல்லோரும் ஒரு முன் தயாரிப்பு அதாவது  என்ன பேசப் போகின்றோம் என்பதை பற்றிய குறிப்புகளுடன் வந்திருந்தார்கள்...

               ஆனால் சுவாமிஜியோ மேடையில் இருந்த போது அவர் கையில் எந்த குறிப்பும் இல்லை.....

                            அவர் நினைத்துக் கொண்டாராம் நாம் என்ன செய்துவிட்டோம் எந்த குறிப்பும் இல்லாமல் வந்திருக்கிறோமே !! என்று...

           அவருடைய தருணம் வந்தது... அறிவிப்பாளர் மூலமாக சுவாமி விவேகானந்தரின் பெயர் அறிவிக்கப்பட்டது....

           

      மெல்ல எழுந்தார்... மைக் இருக்கும் திசை நோக்கி நடந்தார்... அன்னை கலைவாணி யையும் அன்பு குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரையும் நினைத்துக் கொண்டே கூடியிருந்த ஜனங்களை ஒருநிமிடம் பார்த்தார்...

 

 


சகோதர சகோதரிகளே என்று ஆரம்பித்தார்...

 

அவ்வளவுதான் மக்களின் பலத்த கரகோஷம் அடங்கிட வெகுநேரம் ஆனது...

    எல்லோரும் கனவான்களே சீமாட்டி களே மகாபிரபுகளே என்று ஆரம்பித்து தங்களுடைய சார்பான உரையை பேசிக்கொண்டிருந்த போது...

     சுவாமிஜியின் சகோதரத்துவம் நிறைந்த சமத்துவம் வாய்ந்த இந்த இரண்டு வார்த்தைகள் அந்த கூட்டத்தினரை மந்திரச் சொல்லால் கட்டிப் போட்டது...

      வெவ்வேறு இடங்களில் உற்பத்தியானாலும் நதிகள் கடலைச் சேர்வது போல் மதங்களின் பாதை வெவ்வேறாக இருக்கலாம் அது இறைவன் என்னும் கடலில் கலக்கின்றன என்ற அரிய உண்மையினை சனாதன தர்மம் போற்றும் தத்துவத்தை அந்த மேடையிலேயே உரையின் மூலம் நிலை நிறுத்தினார் சுவாமி விவேகானந்தர்...

       பிறகு மக்கள் எல்லாம் இவர் பேசுவதற்காக இறைவனின் ஆசீர்வாதத்தை பெற்று வந்திருக்கிறாரே...

     இப்படி தன் ஆன்மிக சொற்பொழிவு நாள் நமது உள்ளங்களை கட்டிப் போட்டு விட்டாரே என்று பரவலாகப் பேசிக் கொண்டனர்...

     அந்த சர்வமத மகா சபையில் நடந்த வீதிகளில் எங்கும் சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படத்தை கண்டு ஒரு தேவனை வணங்குவதைப் போல் மக்கள் வணங்கிச் சென்றார்கள்...

 

பாஸ்கர சேதுபதி

     

   மேற்குலகம் எனப்படும் மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியாவில் அருட் பெரும் செல்வமான ஆன்மீக தத்துவத்தை பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு நிலைநிறுத்திய அவதார புருஷர் சுவாமி விவேகானந்தர் என்றால் அது மிகையல்ல...

 

     இந்தியாவிலிருந்து ஆன்மீகத்தையும் மேற்குலக நாடுகளிலிருந்து அறிவியலினையும் பரஸ்பரம் பெற்றுக் கொண்டு இரு தரப்புமே வளர்ச்சி அடைய வேண்டும் என்பதை பல இடங்களில் சுவாமிஜி சுட்டிக் காட்டியுள்ளார்...

     ராஜயோகம் எனப்படும் சனாதன தர்மத்தின் அற்புதமான நுட்பத்தின் மீது புதிய ஒளியைப் பாய்ச்சிய சுவாமிஜி..

     முதலாவது போதனையாளராக நான் வந்துள்ளேன் எனக்கு பின்னர் இன்னும் பலர் வருவார்கள் என்றார்...

      இன்று இந்தியாவின் ஆன்மீகம் குறிப்பாக யோகா உலகெங்கிலும் பரவலாக மக்களால் பயிற்சி செய்யப்படுகிறது என்றால் அதற்கு முதல் வித்திட்டவர் சுவாமி விவேகானந்தர் என்றால் அது மிகையாகாது...

     உலகின் ஆன்மீக குரு இந்தியா என்பதை உலக மக்களிடையே நிலைநிறுத்தும் வகையில் இறைவன் தனக்கிட்ட பணியை சிறப்பாக செய்து முடித்தவர் சுவாமி விவேகானந்தர்...

    எந்த ஒரு பரிந்துரையும் இல்லாமல் பல கஷ்டங்களுக்கு பிறகே தனிமனிதனாக சென்று அந்த மகா சபையில் வெற்றிக்கொடி நாட்டிய விவேகானந்தரின் முயற்சி என்பது குருவும் இறைவனும் அவருக்கு அளித்த ஆசீர்வாதம் என்பதைத் தவிர வேறென்ன சொல்வது...

      மேற்கு வங்கத்தில் பிறந்தாலும் சுவாமிஜி விவேகானந்தரை கண்டுகொண்டது தமிழகம்தான்....

                                       

     அவர் சர்வமத மகாசபை மாநாட்டிற்கு செல்ல உதவியவர் நமது இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள்...

    அந்த வகையில் அவர் நமது தமிழகத்திற்கு நெருக்கமானவர் என்பதை நாம் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம்...

      எல்லாத்துறைகளிலும் ஒரு புதிய உத்வேகத்திற்கு அடையாளமாக விவேகானந்தர் வணங்கப்படுகிறார்... சுய முயற்சியில் சிறந்த வெற்றியாளராக அடையாளம் காணப்படுகிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல...

      வரலாற்றில் இந்தியா பெற்ற  அற்புதங்களில் அவரும் ஒருவர்.....

         எங்கள் இதய தெய்வம் யோக ஆச்சாரியார் குருஜி டி எஸ் கிருஷ்ணன் அவர்கள் என்னுடைய ஆதர்ஷ குருநாதர் என்று சுவாமி விவேகானந்தரை அடிக்கடி குறிப்பிடுவார்....

 

          இந்த நன்னாளில் எங்கள் ஆதர்ஷ குருவை போற்றி வணங்கி மகிழ்கிறேன்

.....

 

 

 நன்றி வணக்கம்

 என்றும் குருவின் அருளால்

  பதஞ்ஜலி தியான பீடம்

(ஸ்வார்த்தம் சத்சங்கம் )

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment