ஆயிரம் தலை அழகே
ஆயிரம் தலையும் ஐந்தாகிக் கொண்ட
அற்புத அழகியல் அருட் கோலம்
எங்கள் அன்பு சத்குருவே என்றும் உமதாகியதே 😌
ஆயிரம் முறைகளும் ரசித்திட
அலுக்காத அருட்கோலம்
ஆயுளுக்கும் தந்திடுமே அகமதில் பரவசம் 😀
புதுவித இன்பமதை கூட்டி
புதுத்தமிழ் வரிகளையும் கோர்த்து செய்கின்ற மொழியின்
பழுதில்லா சுவை அல்லவா
நீங்கள்!!!!🙏
பாலைவன வெயிலை
பழமுதிர் சோலையாக மாற்றும்
உம் அன்பினை உணர்ந்திடும் தருணங்கள் நாளும்
உதயமாகும்!!!🌄
சர்ப்பங்களின் சீற்றத்தை ஒடுக்கி சாந்தியெனும்
தத்துவ ஆனந்தமாய் ஆதியைத் தாங்குகின்ற
அற்புத உவமையே எங்கள் ஆதிசேடரே
பொறுமையின் பெருமை ஆகிட நின் சிரம் தாங்கிய புவனம்
அப்பொருளை உணர்ந்திட்ட பின்னே நாளும்
பெருமை என்றே உம்மைப் போற்றும் 🙏🏽
பணிவின் உருவகமாய் பாரையும்
பரம்பொருள் வடிவமாய் பணிந்திட்ட எம் பதஞ்ஜலியாரே
அது ஒன்றே சர்வம் சிவமயம்
என்றுரைக்க சான்றாகி நிற்கும் 🔥
நாள் ஒன்றாகிட தில்லையில் ஞானமுடன் கூடி
எங்கள் உடையவரே தேன் என
உமைக் காண்போம் நாங்கள் ☺️
நீரே கோர்த்து வைத்த அந்த கோபாலரிடம் சொல்வீரே 🪷
உவமைகள் நீ தந்தாய் உயர்வான தமிழும் ஆனாய்
ஊழியன் எப்படி உரிமையாளன் ஆவான் !!!
பொருள் என்பது உமது
அதன் பிழை என்பதே எமது 👈
நாளும் அதைச் செய்வோம் 🦚
(தொடரும் )
(ஆக்கம் : மாதங்கியின் மைந்தன் )
சிவ.உதயகுமார்
No comments:
Post a Comment