Monday, September 11, 2023

விவேகானந்தரும் பதஞ்ஜலி யோக சூத்திரமும்

    சாஸ்திரம் என்பதே ரிஷிகள் வழியாக இறைவன் உலகுக்கு வழங்கியது...

 

      அவை தான் நமது இந்து தர்மத்தின் அடிப்படை ஆணிவேராக என்றும் இருந்து வருகிறது..ஆன்மீகத்தில் ஒவ்வொருவரும் தனது அனுபவத்தையே பிரதானமாக கூறுவார்கள் ஆனால் அவற்றுக்கெல்லாம் சாஸ்திர பிரமாணம் உள்ளதா என்று பெரியவர்கள் கேட்பார்கள்....

    பதஞ்ஜலியை வணங்குபவர்கள் கூட பதஞ்ஜலி யோக சூத்திரத்தை அறிந்ததில்லை படித்ததில்லை.

 

      சத்குருவின் அவதார நோக்கமே இந்த  யோக சூத்திரங்களை உலகுக்கு வழங்கி அதன் மூலமாக மனிதன் இறைவனை அடைய வேண்டும் இறைநிலை பெற வேண்டும் என்பதே ....................

     சிவபெருமானின் உருவத்தை வணங்கி அவருடைய நாமத்தை (நமசிவய) உச்சரிக்க மறந்தால் அது எப்படி வியப்புக்குரியதாக இருக்குமோ. அதுபோலத்தான் பதஞ்சலியை வணங்கி அவரது அவதார நோக்கமும் படைப்புமான பதஞ்ஜலி யோக சூத்திரத்தை அறியாமல் கடந்து செல்வது..

பதஞ்ஜலி யோக சூத்திரம்

 

   அது அவரவர் விருப்பமே என்ற போதிலும் கூட ஒரு இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் என்ற முறையிலே இந்த கருத்தை பதிவு செய்ய வேண்டியது எமது கடமையாகும்...

  விவேகானந்தரின் அமெரிக்க வருகைக்குப் பின்னரே மேற்குலக நாடுகளும் சரி அதனை தொடர்ந்து உலக நாடுகளும் பதஞ்ஜலி யோக சூத்திரத்தை பரவலாக அறிந்து கொண்டன....

   அமெரிக்காவில் உள்ள ஆயிரம் தீவு பூங்கா என்ற இடத்தில் தான் பதஞ்ஜலி யோக சூத்திரங்களுக்கான விளக்கங்களை தனது மேலை நாட்டு மாணவர்களுக்காக அளித்தார் விவேகானந்தர்...

 

   அப்படி ஒவ்வொரு சூத்திரத்திற்கான விளக்கமும் ஒவ்வொரு நாளும் நடைபெறும் போது விவேகானந்தர் ஆழ்ந்த தியானத்திற்கு சென்று விடுவதும் ....

   அவரது சீடரான அந்தப் பெண்மணி கையில் பேனா நோட்டுடன் அவரது அருகிலேயே மணிக்கணக்கில் அமர்ந்திருப்பாராம்.

 

   திடீரென்று தியான நிலையில் இருந்து கொண்டே அவரால் உச்சரிக்கப்படும் வார்த்தைகளை குறிப்புகளாக எடுத்துக் கொள்வார்.பின்பு அதன் அடிப்படையில் பதஞ்ஜலி யோக சூத்திரங்களுக்கு சுவாமி விவேகானந்தர் விளக்கம் கூறுவார் என்று குறிப்பிடுகிறார் அவருடைய உதவியாளர்.

 

    அந்த வகையிலே சத்குரு பதஞ்சலியின் நேரடி ஆசியைப் பெற்று உலகத்திற்கு ராஜயோகம் என்ற பெயரில் பதஞ்ஜலி யோக சூத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.

 

   அதற்கு முந்தைய காலகட்டம் வரை அஷ்டாங்க யோகம் என்று சாதகர்களால் அழைக்கப்பட்ட பதஞ்ஜலி யோகம் சுவாமி விவேகானந்தரின் வருகைக்குப் பின்னர் ராஜ யோகம் என்று அவரால் பெயர் சூட்டப்பட்டது.

 

அவர் வகைப்படுத்திய யோகங்கள் 4

 

🪷 பக்தி யோகம்

🪷 கர்ம யோகம்

🪷 ஞான யோகம்

🪷 ராஜயோகம்

      அதில் அனைத்திற்கும் முதலானது பதஞ்ஜலியின் ராஜ யோகமே என்று விவேகானந்தர் குறிப்பிடுவார். ஏனென்றால் விஞ்ஞானபூர்வமானதும் நிரூபிக்ககூடியதுமான பதஞ்ஜலியின் ராஜ யோகமே அறிவியல் உலகம் ஏற்றதாகும்...

 

    கடந்த காலத்தில் மாந்திரீகர்கள் இவர்கள் மட்டுமே இத்தகைய யோக சாதனை முறைகளை ரகசியமாக பயன்படுத்தி அதன் மூலம் பயன் பெற்று வந்தனர்.இறைவனுடைய ஆணையாக அதை பொதுமக்களுக்கும் கொண்டு சென்ற பெருமை சுவாமி விவேகானந்தருக்கே உரியதாகும் 🪷

   இன்று ஐநா சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு 194நாடுகளில் யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது என்றால், அதற்கு துவக்கப் புள்ளியாக அமெரிக்காவில் ஆரம்பித்து வைத்தவர் நமது சுவாமிஜி விவேகானந்தர் அவர்கள். ..

 ஸ்வார்த்தம் சத்சங்கம் என்ற நமது சபையின் அடிப்படையே பதஞ்சலி யோக சூத்திரம்தான் ....

   இந்த பதஞ்ஜலி யோக சூத்திரத்தை உணர்ந்து அனுபவித்து அதன் பயிற்சி முறைகளைப் பின்பற்றி இறை அனுபவத்தை இறை கலப்பினை பெறுவதை இலட்சியமாக பின்பற்றுவதை சத்குரு ஸ்ரீ பதஞ்சலியின் அருள் ஆசியினால் யோக ஆச்சாரியார் குருஜி டிஎஸ்.கிருஷ்ணன் மூலமாக இந்த இயக்கத்தின் கோட்பாடு என்பது வரையறுக்கப்பட்டது. பல ஆண்டு காலம் தனது மாணவர்களுக்கு பதஞ்ஜலி யோக சூத்திரத்திற்கான  விளக்கத்தை அளித்து அதனை பின்பற்ற அவர்களுக்கு உபதேசமும் அளித்தார் நமது குருநாதர்...

 

     பக்தி பூர்வமாக வணங்குவதற்கு நமது சனாதன தர்மத்தில் முப்பத்து முக்கோடி  தெய்வங்கள் உள்ளது என்பார்கள்.அந்த வகையிலே பக்தி என்பதற்கு, வேறுபாடு இல்லாமல் அது அனைவரும் பின்பற்றக் கூடியதாக அமைந்துள்ள ஒன்று. அந்த பக்தி நெறியை விஞ்ஞானபூர்வமாக பயன்படுத்தி இறைவனை அடையும் யுக்தி தான்  பதஞ்ஜலி யோகம் 

 

    எல்லா ரிஷிகள் மற்றும் முனிவர்களையும் போல பதஞ்ஜலியின் பிறப்பு அமையவில்லை ...மாறாக ஜீவர்களை முக்தி அடையச் செய்வதற்கான சாஸ்திரத்தை இயற்றுவதற்காகவே அவருடைய பிறப்பு அமைந்தது என்பது தனிச்சிறப்பு உடையதாகும்....

 

   சர்வ மதங்களிலும் காணப்படக்கூடிய ஆன்மீக அடிப்படை உண்மைகள் அனைத்தையும் நிரூபிக்க தக்க வகையில் தனக்குள்ளே தொகுப்பாகக் கொண்டது பதஞ்ஜலி மஹரிஷியின் ராஜயோகம் .அத்தகைய பதஞ்ஜலி யோக சூத்திரத்தை அனைவரும் படித்து பயிற்சி செய்து ...

 

    இந்த மானிடப்பிறவியின் உன்னத நோக்கமான இந்த மனிதப் பிறவியினால் மட்டுமே அடையக்கூடிய அந்த இறைநிலையை எய்துவோமாக....

   இந்தப் பிறவியில் சத்சங்கத்தையும் குருநாதரையும் இறைவன் திருவருளால் எமக்கு அறிமுகம் செய்தது  விவேகானந்தரின் ராஜயோகம் என்ற உன்னதமான நூல்...

 

   பதஞ்ஜலி என்றை பெயரையே இந்த நூல் மூலமாக அறிந்து கொண்டோம் என்றால் அதை கூறுவதற்கு இதைவிட மிகையான வார்த்தைகள் இல்லை .

 குருவருளால்

சிவ. உதயகுமார்- மு.கமலக்கண்ணன்

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment