Thursday, February 8, 2024

கணத்தினில் கடந்திட்ட காலம் ( தை மாதம் மூல நட்சத்திரம் 2024) - 5

கணங்களில் காலத்தை மறந்திடச் செய்த

காதலாகிய அற்புதம் 💞



பொன் நகை பதித்தது போன்ற

 புன்னகை முகத்தில்... 😀

                                                                          



மர்மப்புன்னகை ஒளித்து வைத்த 

மயக்கங்கள் கலைத்திடும் ரகசியம்🤫


நிகழ்ந்தது அன்பே


நனவின் கனவாகிய அற்புதம்🙏🏽🤘


இனிதென சூத்திரத் துவக்கம்
கனவெனும் நிழலை
கடத்திடும்🪷

ஐந்தாகிய‌ உடம்பின் ஆனந்த நிலை

 அந்நாளில் காண்போம் 🌀


அடையாள அனுபவம் அடைந்ததே

 அறியாமல் தந்த💞💞💞


மேதகுத் தலைவனின் 

மேன்மை சபை தனை🌟



சுந்தர நிலை சூத்திரத்தோடு 

தேவாரமும் திருப்புகழ் உலாவும்💝




பெரும் புகழை நாம் கொண்ட 

பரவசத்தில் ஆழ்த்தும் நாளும் நம்மை 🌿✍️✍️



ஆழ்த்திய தாயன்பு உடையவரே

தாயுமான பதஞ்ஜலி மாமுனியே💐💐



ஓங்கார ஓசையாய் 

ஓங்கட்டும் உம் புகழ்

 

#மாதங்கியின்_மைந்தன் 


No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment