Thursday, February 8, 2024

தவத்தினை நிதம் புரி -4

 
முனைப்பெனும் மனப்போர்கள்
ஓய்ந்த பிறகு
தவம் எனும் வனம் மலரும் 🪷🪷🪷


ஒற்றை நினைப்பும் 
 

ஒன்றில் கரைந்து
கேட்பவனும் மறைந்து விட மூலமாய் 
தியானம் எனும் சாஸ்வதம்🪷
 

உதயத்தின் முன்பாக விழித்து
மேன்மை குறித்து நாளும் தவத்திருப்பாய்  
இனியவனே பல காலங்கள்🪷
 
 
 தனித்திருக்கும் அக்கால வழமையின் பின்னே
உன் தத்துவ முத்துக்களை
 நான் எனும் இதுவும் வழிமொழியும்🪷🪷


செயல் பின்னே நடைபழகியோர்க்கு
சொற்போருக்கு நேரமில்லை.. 
அன்பே


சுந்தரத் தலைமை இட்ட பணி இருக்கும் 
என்றும்
இறவாத ஞானம் எய்தும் வரை🙏🏽🙏🏽


உற்சாகம் கொண்டு பணி செய்வோருக்கு
 என்றும் ஊக்கமாக இருக்க வேண்டும்
 நம் இயல்பு 💞



வலைகளை அறுத்து 
வசந்தத்தை நோக்கமாக எண்ணியோர்க்கு
எண்ணிய செயல் ஈடேற 🪷🪷


ஆன்ம பணி இதுவே என்று அழகாய் 
உத்தர வழி உரைத்த ஒப்பற்ற சத்குருவே
என்றும் காப்பு காப்பு



#மாதங்கியின்_மைந்தன்

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment