Saturday, March 8, 2025

காரிய வாதமும் விதண்டா வாதமும் !!!

#குரு எப்போதும் ஒரு காரியவாதி.

 

ஆம் எப்போதும் காரணமான ஆதியை அறிவதிலே அனுபவிப்பதிலே தனது சிந்தையை பல்வேறு பிறவிகள் அதிலேயே செலுத்தி பிறகு அதிலே வெற்றியும் அடைந்து  ஒரு குருவாக மாறிய பின் ...................

 

இறைவனால் தன்னிடம் அனுப்பப் படும் மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்கு #காரண காரிய வாதத்தை போதித்து ............

 


தன்னைப் போல அவர்களையும் மாற்ற அவர் எப்போதும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார் ..........

 

உண்மையில் #பொன், #பொருள், புகழ், #ஆயுள் இன்ன பிற விஷயாதி வஸ்துக்களை எல்லாம் தங்களுக்கு இறைவனும் சத்குருவும் அனுக்ரஹம் செய்ய வேண்டும் என்று கேட்பவர்கள் அதற்காக மட்டுமே #பக்தி செய்பவர்கள் எல்லாம் இந்த காரியவாதிகளை ஒப்பிடும்போது மிகுந்த #அப்பாவிகள்..............


ஏனென்றால் மேன்மையில் மேன்மை அந்த #பரம்பொருள் அல்லவா ..

அது அறியுமே நம் #உள்ளம்... நம் தேவை அறிந்து தானாகவே தரும்

 

ஞானத் #தெளிவு என்பது ஒரு மொட்டு பூவாக மலர்வது போல மெல்ல மெல்ல உள் அனுபவமாக நிகழும்.

 

 ஆதலின் சிறிது சந்தேகத்திற்கு இடம் இருப்பதும் பிறகு அந்த சந்தேகத்தை சத்குருவானவர் அகற்றுவதும் நமக்கு கிடைக்கும் ஆன்ம அனுபவமே..................

 

காரிய வாதத்திற்கு பயணப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தெரியும். 

மேலான பரம்பொருளை லட்சியமாக கொண்ட இவ்வாழ்க்கைப் பயணத்தில் எதிர்வரும் சங்கடங்களை சத்குருவின்  அருளே நிரோதகம் (அழிப்பது ) செய்துவிடும் என்பதே..........

 

சித்த வ்ருத்தி #நிரோதஹ என்பது மட்டுமல்ல கஷ்ட விருத்தி #நிரோதஹ என்பதுவும் சத்குரு நமக்களிக்கும் வெற்றிச் #சூத்திரம்

 

ஆதலால் லௌகீக விஷயங்களை முன்னெடுத்து அதன் காரணமாக ஆன்மீகப் பாதையில் நுழையும் அன்பர்களிடம் சஞ்சலத்தையும் , சங்கடத்தையும் ஏற்படுத்தக் கூடிய விதியின் கைப்பாவையாக இருக்கக் கூடிய அந்த அப்பாவிகளை #இனம் கண்டு அவர்களையும் கடந்து செல்ல வேண்டும்.

 

காரண வாதத்தை அறிகிற காரிய வாதம் நமது இயல்பாகவும்

பொருள் வாதத்தை முன்னிறுத்தும் அந்த விதண்டாவதத்தையும் அதன் போக்கிலே விட்டு விட வேண்டும் என்பதே சத்குருவின் #உபதேசம் ............

 

காலமானது அவர்களை தன் கணக்கிலே நேர் செய்து கொள்ளும்

 

ஓம் சத்குருவே சரணம்

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment